எல்லாரும் ஹார்மோனிய பெட்டிய தொட்டுடறாங்க? ஆணவத்தில் பாக்யராஜாவை அசிங்கப்படுத்திய இளையராஜா

Bhagyaraj Ilayaraaja
By Edward Jun 02, 2022 07:55 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த இயக்குனர்களில் ஒருவர் கே பாக்யரா. பாரதிராஜாவின் சார்பட்டாவில் இருந்து முளைத்த கிளையாக பாக்யராஜ் திரைப்பயணத்தை ஆரம்பித்தார்.

இயக்கம் மட்டும் இல்லாமல், கதையாசிரியர், இசையமைப்பாளர் என்று பன்முகத்திறமையை கொண்டு விளங்கினார் பாக்யராஜ். அப்படி இசையமைப்பாளராகிய சம்பவத்தினையும் இளையராஜா தன்னை நடத்திய விதத்தையும் பேட்டியொன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கே பாக்யராஜ் இயக்கிய சின்ன வீடு படத்திற்கு பிறகு இசையமைப்பதற்காக இளையராஜாவை புக் செய்திருந்தாராம். படம் ஆரம்பிக்கும் போது கொஞ்சம் முன்கூட்டியே சொல்லிடுங்க என்று இளையராஜா கேட்டுக்கொண்டாராம்.

அதேபோல் கதை ரெடி எப்போது கேக்குறீங்க என்று அவரது அசிஸ்ரெண்ட்-ஐ பார்த்து கேட்டேன். ஆனால் அசிஸ்டெண்ட் என்னிடம் வந்து அவரை வீட்டிற்கு சென்று பாருங்கள் என்று கூறினார். நான் ஏன் அவரது வீட்டுக்கு போக வேண்டும்.

ஸ்டுடியோவில் தானே எப்போதும் பார்ப்போம். அவர் எப்போது விருப்பமோ அப்போது சொல்லுங்க கம்போசிங் வெச்சிக்கலாம் என்று கூறிவிட்டேன். திரும்பவும் அசிஸ்டெண்ட் வீட்டுக்கு போய் பாருங்க என்று கூற நான் வந்துட்டு போனேன் என்று சார் கிட்ட சொல்லு என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.

ஆனால் இது பற்று இளையாராஜா ஏன் பாக்யராஜ் வரல என்று கூட கேட்கவில்லை. அசிஸ்டெண்ட் அவரிடம் என்ன சொன்னாரு என்று தெரியவில்லை. அதன்பின் நானும் கண்டு கொள்ளவில்லை அப்படியே விட்டுவிட்டேன். இதன்மூலம் உருவானது தான் என்னுடைய கம்போசிங்.

பின் கங்கை அமரன் வந்து நீங்களும் அண்ணாவும் சேர்ந்து வேலை பண்ண வேண்டும் என்று கூறியதால் தான் நான் மீண்டும் இளையராஜாவுடன் சேர்ந்து பணியாற்றினேன் என தெரிவித்துள்ளார் கே பாக்யராஜ்.