இன்னொரு பெண்ணோடு சவகாசம்! சரிதாவை திட்டித்தீர்த்தார்கள்! இயக்குனர் பாக்யராஜ் ஓப்பன் டாக்..
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் நெஞ்சில் இருக்கும் படியான கதைகளத்தை எப்படி ரசிப்பான் என்று விரல் நுனியில் வைத்திருப்பவர் கே பாக்யராஜ் அப்படியே நமக்கு போர் அடிக்காத படி அழகாக கதை நகர்த்தி ஹிட் கொடுத்து வந்தார் பாக்யராஜ்.
அப்படி மிகப்பெரிய ஹிட் கொடுத்த படங்களில் ஒன்று தான் மெளன கீதங்கள். நடித்து இயக்கிய படமாக இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சரிதாவை நடிக்க வைத்திருப்பார் பாக்யராஜ். இப்படம் குறித்து சமீபத்தில் பாக்யராஜ் மேடையில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
விவாகரத்தான் இரண்டு மூன்று பேர் என்னிடம் வந்து, உங்கள் படத்தை பார்த்த பின்பு தான் விவாகரத்தான நாங்கள் மீண்டும் இணைந்தோம் என்று கூறி மெய்சிலிர்க்க வைத்தார்கள். படம் இப்படியொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை.
அப்படத்தில் வேறொரு பெண்ணுடன் சவகாசம் வைத்திருந்து அதன்பின் மனைவியுடன் சண்டைவரை சென்று பிரிந்து விடுவார்கள். படத்தின் கிளைமேக்ஸில் எப்படி இணைந்தார்கள் என்ற கதை தான் மெளன கீதங்கள்.
குறிப்பாக தவறு செய்த என்னை திட்டாமல் கோவித்து கொண்ட சரிதாவை தான் படத்தை பார்த்த மக்கள் திட்டினார்கள். அதில் பெண்களும், அவன் தான் ஒரு தடவை தப்பா போயிட்டான் அதுக்காக இந்த பொண்ணு இப்படி பண்றாலே என்று புலம்பிவிட்டு சென்றார்கள் என பாக்யராஜ் கூறியுள்ளார்.