ஏன் சப்ஸ்கிரிப்ஷன் ஆரம்பித்தேன்!! உண்மையை கூறிய நடிகை நந்திதா ஸ்வேதா.
சினிமாவில் களமிறங்கிய வேகத்தில் பெரிய வெற்றிப் படங்களை கொடுத்தவர் தான் நந்திதா ஸ்வேதா. இவரைப் பார்த்ததுமே ரசிகர்கள் குமுதா ஹேப்பி அண்ணாச்சி என்று தான் கூறுவார்கள். அந்த அளவிற்கு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் விஜய் சேதுபதி இவருக்காக கூறிய டயலாக் செம பேமஸ்.

இதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த நந்திதா, தெலுங்கு சினிமாவில் நடித்து பிரபலமானார்.1.4 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை வைத்துள்ள நந்திதாவின் சப்ஸ்கிரிப்ஷனுக்கு மாதம் கட்டயணம் நபர் ஒருவருக்கு ரூ.390 தொகையை நிர்ணயித்து 80க்கும் மேற்பட்டவர்கள் அதில் இணைந்துள்ளனர்.
குறைந்த பட்ம் 40 ஆயிரம் முதல் லட்சம் வரை இதன்மூலம் நந்திதா சம்பாதிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார்கள்.
ஏன் சப்ஸ்கிரிப்ஷன்
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேள்விகளுக்கு பதிலளித்துள்ள நந்திதா, ரசிகர் ஒருவர் ஏன் சப்ஸ்கிரிப்ஷன் ஆரம்பித்தீர்கள், என்னவெல்லாம் பதிவிடுவீர்கள் என்ற கேள்வி கேட்டுள்ளார். அதற்கு நந்திதா, நான் ஏன் சப்ஸ்கிரிப்ஷன் ஆரம்பித்தேன், இதுதான் எல்லாருடைய கேள்வியா? இது பப்ளிசிட்டி வேற ஆகிவிட்டது.

இன்ஸ்டாகிராம், இந்த சப்ஸ்கிரிப்ஷனை ஆரம்பித்தபோதே எப்பவே ஆக்டிவேட் பண்ணிவிட்டேன், அவ்வளவெல்லாம் போஸ்ட் போடவில்லை. எக்ஸ்கிளூசிவ் என்பது தெரியவில்லை, அது பற்றி பேசவும் விரும்பவில்லை.
நான் இன்னும் பப்ளிக்காக எந்த வீடியோவும், புகைப்படங்களும் போடவில்லை, எனக்கு அது ஸ்பெஷலாக இருப்பதையே பகிர்கிறேன், சும்மா ஆக்டிவேட் பண்ணேன், சப்ஸ்கிரைபர் செக் பண்ணுங்க என்று கூறியிருக்கிறார்.
இதற்கு முன் யூடியூபில் சிலர் நந்திதாவின் சப்ஸ்கிரிப்ஷன் பற்றிய பேசியவருக்கு அந்த வீடியோவில் பதிலடி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Nandita Swetha Clarification குடுத்துடாங்க.. 😳 https://t.co/v82lBuQAIs pic.twitter.com/ycwrO5wGFd
— நாய்க்குட்டி (The Dog) (@KuttyNaai_) June 29, 2026
