பாரதி கண்ணம்மாவில் என்ன நடந்தது! சீரியல் நடிகை கண்மணி விலக என்ன காரணம்?

anjali bharathikannamma tamilserial kanmanimanoharan
By Edward Mar 15, 2022 05:15 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகும் பல சீரியல்களில் மக்கள் மனதில் அதிக வரவேற்பு பெற்று வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. ஆரம்பத்தில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி ஹரிபிரியன் சீரியலில் இருந்து விலகி அவருக்கு பதில் விணுஷா கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அதேபோல் அகிலன் கதாபாத்திரத்தில் நடித்தவர் விலகி வேறொருவர் சேர்க்கப்பட்டார். அவரை தொடர்ந்து சில வாய்ப்புகள் வந்ததால் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்த கண்மணி மனோஹரன் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார்.

ஆரம்பத்தில் வில்லியாக நடித்து பின் திருந்தி நல்ல பெண்மணியாக கதாபாத்திரம் சென்று கொண்ருக்கும் நிலையில் விலகி இருக்கிறார். பாசிட்டிவ் கதாபாத்திரம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கும் ஒரு சமயத்தில் வேறொரு சேனலுக்கு தாவியிருக்கிறார்.

சூப்பர் குயின் என்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்றும் அந்த சேனலில் ஆரம்பிக்கவுள்ள புது தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் கண்மணி, சமீபத்தில் பதிவிட்டு ஒரு பதிவி சர்ச்சையாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா நீ என்ற வாக்கியத்துடன், தப்பான நபர்களுக்காக எப்போது வேலை செய்யாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு என்ன காரணம் ஏன் இப்படி பதிவு போட்டுள்ளார் பாரதி கண்ணம்மா சீரியலில் என்ன நடந்தது என்று ரசிகர்கள் பலர் கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.