எல்லாம் இருக்கு மண்டைல மூளை தான் இல்ல! பாரதியை ஓட்டிய கண்ணம்மா..

bharathikannamma roshini vinusha varunprasad
By Jai Dec 24, 2021 08:45 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் கடந்த 3 ஆண்டுகளாக 668 எபிசோட்டுகளை கடந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. அருண் பிரசாத், ரோஷினி, பரீனா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வரும் இந்த சீரியலில் சமீபத்தில் கண்ணம்மாவாக நடித்து ரோஷினி சீரியலில் இருந்து சில காரணங்களால் வெளியேறினார். அவருக்கு பதில் மாடல் மற்றும் டிக்டாக் பிரபலம் வினுஷா கண்ணம்மாவாக நடித்து வருகிறார்.

இதையடுத்து வெண்பா கர்ப்பமானதால் பரீனா நிகழ்ச்சியில் இருந்து சில நாட்கள் விலகியுள்ளார். இந்நிலையில் கதையை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்று குழம்பிய இயக்குனர் விவாகரத்திற்காக பாரதி கண்ணம்மா விட்டிற்கு சென்று, அங்கு நடக்கும் அட்ராசிட்டிகளை ஒளிப்பரப்பு செய்து வருகிறார்கள்.

காமெடி, ரொமான்ஸ் என ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியலில் பாரதியை கண்ணம்மா ஓட்டி வருகிறார். முருங்கை காய் சாப்பாடு சாப்பிட்டு இரவில் அவர் செய்த செயலின் வீடியோ பிரமோவாக வெளியாகியுள்ளது. இதை பலர் கண்டபடி கேலி செய்து வருகிறார்கள்.