இந்த சபதம் எத்தன வருஷத்துக்கு கண்ணம்மா! பாரதியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..

serial television bharathikannamma vinusha
By Edward Jan 25, 2022 06:19 AM GMT
Report

சின்னத்திரை தொலைக்காட்சியில் 3 ஆண்டுகளுக்கு மேலாக 677 எபிசோட்டுகளை தாண்டி ஒளிப்பரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி ஹரிபிரியன் சீரியலில் இருந்து விலகி படங்களில் நடித்து அதே தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வருகிறார்.

அவருக்கு பதில் வினுஷா நடித்து வருகிறார். தற்போது கதை வேறு ஒரு கதைகளமாக மாறி வருகிறது. இன்னும் சந்தேகம் தீராத பாரதி தான் செய்த தப்பை ஒப்புக்கொண்டால் உன்னுடன் சந்தோஷமாக வாழ்கிறேன் என்று கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி ரசிகர்களிடையே கோபத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மீண்டும் பாரதியை சந்தித்து, நான் கலங்கமில்லாதவள் என்றும் என்குழந்தைகளுக்கு யார் அப்பா என்பதை உலகிற்கு காட்டுவேன் என்று கூறி கண்ணம்மா சபதத்தை கூறி சென்றுள்ளார். இப்படியே சபதம் எத்தன வருஷத்துக்கு போகுமோ என்று கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.