ஒரு நாளைக்கு 3 பாக்கெட் சிகரெட் பிடிப்பார்! மறைந்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் பற்றி உளறிய நடிகர்..
தொலைக்காட்சி தொடரில் பெரிய ஹிட் கொடுத்து வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் கடந்த வாரங்களில் ராஜா ராணி சீரியலுடன் மெகா சங்கமம் நடைபெற்றது. கண்ணம்மாவிற்கு தந்தையாக அந்த சீரியலில் நடித்து வந்தவர் வெங்கட்.
சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் நடித்து வந்த வெங்கட் சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பால் மரணமடைந்தார். அவரின் இறப்பால் பல பிரபலங்கள் அதிர்ச்சியடைந்து இரங்கலை தெரிவித்து வந்தனர்.
அப்படியாக சரவணன் மீனாட்சி சீரியலில் கதாநாயகனாக நடித்து இர்பான் நடிகர் வெங்கட் பற்றி கூறியுள்ளார்.
சரவணன் மீனாட்சி சீரியலின் போது படப்பிடிப்பு தளத்திலேயே ஒரு நாளை 3 பாக்கெட் சிகரெட் பிடிப்பார். அதை நான் தடுத்து பிடிக்காதீர்கள் என்று குறைகளாக கூறினேன். அதை அவர் கேட்கவில்லை என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார் இர்பான்.