டைம் பாம்-ஆல் வெடித்து சிதறிய பாரதி கண்ணம்மா.. இப்பவாது சுபம் போட்டு முடிங்க..கெஞ்சும் நெட்டிசன்கள்

Bharathi Kannamma Serials
By Edward Sep 18, 2022 11:15 AM GMT
Report

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடர் எப்போது முடியும் என்றும் தான் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். அந்த அளவுக்கு அந்த சீரியல் பரபரப்பு இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது பாரதியின் மருத்துவமனையில் கண்ணம்மா வேலை செய்து வருகிறார்.

அவர்கள் குடும்ப பிரச்சனைகள் ஒருபுறம் இருக்க தற்போது அந்த மருத்துவமனையை தீவிரவாதிகள் hijack செய்வது போல காட்டப்பட்டு வருகிறது. எல்லைமீறி பல காட்சிகலை தீவிரவாதிகளை வைத்து ஒரு மாத காலமாக ஒளிப்பரப்பு செய்து விட்டனர்.

நாளை எபிசோட்டில் போலிசார் மீட்பது போன்று கட்டிப்போட்டு உயிருக்கு போராடும் பாரதியை காப்பாற்ற தனியாக கண்ணம்மா செல்கிறார்.

அப்போது பாரதி உடலில் டைம் பாம் கட்டியிருப்பதால் நானும் உங்களோடு சாவுகிறேன் என்று பாரதியை கண்ணம்மா கட்டியணைத்து கொள்ள, பின் மால் வெடித்து சிதறுகிறது. இதன்பின் என்ன ஆனது தான் வரும் நாளில் தெரியவரும்.

இப்படி இருக்கையில் வெடித்து சிதறியது சுபம் போட்டு முடிங்க என்று பிரமோ வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் கதறி கருத்துக்களை கூறி வருகிறார்கள்.