வெளியான DNA ரிப்போர்ட்! குற்றவுணர்ச்சியால் கதறித்தள்ளும் பாரதி.. முடியப்போகும் பாரதிகண்ணம்மா சிரீயல்.

Bharathi Kannamma Star Vijay Serials
By Edward Nov 27, 2022 08:36 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சி சேனலில் கடந்த 2019ல் இருந்து ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியல் பாரதி கண்ணம்மா.

சீரியலை பார்க்கிறார்களோ இல்லையோ, அதில் வரும் காட்சிகளை ட்ரோல் செய்து கலாய்த்து மீம்ஸ் புகைப்படங்களை வெளியிட்டு வைரலனதே அதிகம் தான். அப்படி டி.என்.ஏ டெஸ்ட் ஒன்றிற்காக இந்த சீரியலை இப்படி இழுத்தடித்து வருகிறார்களே என்று நெட்டிசன்கள் புலம்பியும் வந்தனர்.

அப்படி ஒரு வழியா வெண்பாவுக்கு திருமணம் பாரதியின் டிஎன்ஏ முடிவு என்று எபிசோட் வந்த நிலையில் சீரியல் முடிந்துவிடும் என்று நினைத்து வந்தார்கள்.

ஆனால் இந்த வாரம் எபிசோட்டில் ஹேமாவை வெண்பா பிளான் போட்டு கடத்திய சம்பவம் நடந்துள்ளது. ஒருவேலை பாரதி டெல்லி சென்று டெஸ்ட் ரிப்போர்ட் வாங்க செல்ல ஹேமாவை வெண்பா கடத்தி கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்த ரிப்போர்ட்டில் பாரதி தான் தன் மகள்களின் அப்பா என்று தெரியவருகிறது.இதனால் குற்றவுணர்ச்சியில் பாரதி கதறி அழுகிறார்.

இப்படியிருக்க இந்த வாரத்தோடு பாரதி கண்ணம்மா சீரியலை முடித்துவிடுவார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.