வெண்பாவின் அந்த காட்சியை தொடர்ந்து வெறுப்பேற்றும் பாரதி கண்ணம்மா சீரியல்.. இதுல விக்ரம் பட BGM வேற...

Bharathi Kannamma Serials
By Edward Aug 26, 2022 09:00 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. 3 ஆண்டுகளாக ஒளிப்பரப்பு செய்யப்படு வரும் இந்த சீரியல் மக்கள் மத்தியிலும் டிஆர்பியில் சிறந்து விளங்கி வருகிறது. ஆனால் கதையில் ஒரே உருட்டு உருட்டு என்று ரசிகர்களை வெறுப்பேற்றி வருகிறது.

வெண்பா சமீபத்தில் ரோஹித்துடன் நெருக்கம் காட்டி கர்ப்பை இழந்து முழிக்கிறார். மறுபக்கம் ஹேமாபை படிக்கும் பள்ளியை மாற்ற பாரதி திட்டம் போடுகிறார். இதற்கிடையில் பாரதி அப்பாவுக்கு சாகும் அளவிற்கு நோய் பிரச்சனை.

இப்படி இருக்கையில் கண்ணம்மா வேலை செய்யும் மருத்துவமனைக்கு துப்பாக்கியோடு இரு நபர் உள்ளே சென்று யாரை கொலை செய்ய திட்டமிடுகிறார்கள் என்பது தான் டிவிஸ்ட்டாக இருக்கிறது.

இதில் விக்ரம் படத்தில் BGM வேற ப்ளே செய்வது பார்க்கும் ரசிகர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. கண்ணம்மாவின் இரு மகள் பாரதியுடையது என்பதை நிரூபிக்க ஆரம்பித்த கதை தற்போது மருத்துவமனை, பள்ளி என்று வேறு ரூட்டுக்கு சென்று உருட்டி வருகிறாரே இயக்குனர் என்று நெட்டிசன்கள் புலம்பி பிரமோ வீடியோவை கழிவி ஊற்றி வருகிறார்கள்.