வெண்பாவுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை இல்லையாம்? வேலைக்காரனாமே? இப்படியொரு உருட்டு தேவையா!
பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேல் இந்த சீரியல் ஒளிப்பரப்பு செய்யப்பட்டு மக்களிடம் பேராதரவை பெற்று வருகிறது. அப்படி நல்ல வரவேற்பு பெற்றாலும் நெட்டிசன்களால் பெரியளவில் விமர்சித்தும் கேலி கிண்டலுக்கு ஆளாகியும் வருகிறது இந்த சீரியல்.
எப்போது இந்த சீரியல் முடியும் கதை வேறு வேறு பாதையில் செல்கிறதே என்று கூட பலரின் கருத்தாகவும் விமர்சனமாகவும் இருக்கிறது. தற்போது வெண்பாவின் அம்மா அவருக்கு மாப்பிள்ளை பார்க்கும் முயற்சியில் இருக்கையில் வெளிநாட்டு மாப்பிள்ளையை வரவழைத்திருக்கிறார்.
அவர் வேறு யாருமில்லை, அதே தொலைக்காட்சியில் பிளாப்பாகி மூடப்பட்ட வேலைக்காரன் சீரியலின் கதாநாயகனை தான் வெளிநாட்டு மாப்பிள்ளையாக நடிக்க வைத்துள்ளனர். வெண்பாவை ரவுடிகள் கடத்த முயற்சி செய்யும் போது ஹீரோவாக மாஸ் எண்ட்ரி கொடுத்திருப்பதை பலர் கண்டபடி கேலி செய்து வருகிறார்கள்.
இது எல்லாமே வெண்பா அம்மா ஷர்மிளாவின் பிளான் தானாம். கடைசியில் வெண்பாவை அணைத்தபடி போஸ் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வணக்கம் & Welcome to Rohith.. ?
— Vijay Television (@vijaytelevision) June 2, 2022
பாரதி கண்ணம்மா - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில #BarathiKannamma #VijayTelevision pic.twitter.com/tyBqwFe2Jk