ஷூட்டிங்கில் நடிகையை பளார் விட்ட பாண்டியன்.. கடுப்பாகி நடிகரின் கன்னத்தில் அறைந்த பாரதிராஜா..

Revathi Gossip Today Bharathiraja
By Jai Nov 22, 2022 01:15 AM GMT
Report

1983ல் பாண்டியன், ரேவதி இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய மெகா ஹிட் கொடுத்த படம் மண் வாசனை. தன் படத்தில் நடிக்கும் கலைஞர்களுக்கு நடிப்பு வரவில்லை என்றால் அடிக்கும் அளவிற்கு சென்றுவிடுவார் பாரதிராஜா.

அப்படி பல நடிகர் நடிகைகள் அடிவாங்கி உயரத்தை தொட்டிருக்கிறார்கள்.அந்தவகையில் மண் வாசனை படத்தின் ஷூட்டிங் சமயத்தில் ரேவதியை பாண்டியன் அடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது பல டெக்குகள் எடுத்து அடித்தும் பாரதிராஜாவுக்கு திருப்தி அளிக்கவில்லை.

இதனால் பாண்டியன் கன்னத்தில் ஓங்கி பளார் விட்டுள்ளார் பாரதிராஜா. அவர் அடித்த கோபத்தில் ரேவதியை அப்படியே திரும்பி கன்னத்தில் பளார் விட்டுள்ளார் பாண்டியன். அதன்பின் கிளைமேக்ஸ் காட்சியில் கத்தி அழ வேண்டும்.

ஆனால் ரேவதிக்கு சரியான நடிப்பு வராத எதார்த்தமாக அழுகை இருக்க வேண்டும் என்பதற்காக பாரதிராஜா ரேவதியை ஓங்கி அறைந்திருக்கிறார்.

வலி தாங்க முடியாமல் ரேவதி அழுதிருக்கிறார். அப்போது அவர் என்னை அடிக்கவில்லை என்றால் அப்படத்தில் நேர்த்தியான நடிப்பு இயல்பாக வந்திருக்காது என்று ரேவதி சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

Gallery