பிச்சைக்காரன் ஹீரோயினுக்காக போட்டிப்போட்ட இயக்குனர்கள்..!! மேடையில் பாரதிராஜாவை கலாய்த்த பாக்யராஜ்
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து தன் இசையால் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இசையை தாண்டி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி பல வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்த போது ஷூட்டிங்கில் விபத்து ஏற்பட்டு தாடை முழுவது பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து பிளேட் வைக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் அதிலிருந்து குணமாகி பிச்சைக்காரன் படத்தினை முடித்துள்ளார். இசை, நடிப்பை தாண்டி இப்படத்தினை விஜய் ஆண்டனியே இயக்கி இருப்பது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
வரும் 19 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் பிச்சைக்காரன் 2 படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பிரபல இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் பாக்யராஜ் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டனர்.
மேடையில், முதல்லயே ஹீரோயினை காட்டக்கூடாதா, பரவாயில்லைவிடு, நமக்கு ஹீரோயின் முக்கியமில்லையா என்று நடிகை காவ்யா தபாரை ஆசிர்வதித்தார். அதனை தொடர்ந்து பாக்யராஜ் சால்வை போன்ற யோசித்த போது முதலில் பாரதிராஜா சென்று நடிகைக்கு போர்வை போர்த்திவிட்டார்.
இதனை பார்த்த பாக்யராஜ், எங்க டைரக்டர் முந்திக்கிறாரு வெள்ளம் தின்கிறவன் ஒருத்தன் விரல் சூப்புறவன் இன்னொருத்தன் என்று மேடையில் கலாய்த்துள்ளார் பாக்யராஜ். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.