நடிக்கவே வேண்டா கிளம்புடா!! வடிவேலுவை விரட்டிவிட்ட பாரதிராஜா..
வடிவேலு
தமிழ் சினிமாவில் தன்னுடைய காமெடியால் வயிறு குலுங்க சிரிக்க வைத்து மிகப்பெரிய இடத்தினை பிடித்தவர் வடிவேலு. தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கி பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார்.
இடையில் சில பிரச்சனைகளால் சினிமாவில் இருந்து விலகி, சில ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். சினிமா பாதையில் மக்களை சிரிக்க வைத்திருந்தாலும் ரியல் வாழ்க்கையில் அவர் சற்று கரரான ஆள் என்று சக காமெடி நடிகர்கள் கூறி வந்தனர்.
விரட்டிவிட்ட பாரதிராஜா
இந்நிலையில், கிழக்கு சீமையிலே படத்தின் போது இயக்குநர் பாரதிராஜாவால் வடிவேலு விரட்டிவிடப்பட்ட சம்பவம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அப்போதைய காலக்கட்டத்திலேயே கிழக்கு சீமையிலே படத்தை பிரம்மாண்ட செலவில் பாரதிராஜா இயக்கி இருந்தார்.
மிகப்பெரிய பட்ஜெட் என்று அறிந்த வடிவேலு, சம்பளத்தை உயர்த்தி கேட்போம் என்று ரூ. 25 ஆயிரம் சம்பளம் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த பாரதிராஜா, நீ நடிக்கவே வேணாம் கிளம்புடான்னு சொல்லி விரட்டிவிட்டாராம்.
அங்கிருந்து கண்ணீருடன் சென்ற வடிவேலுவை பார்த்து தயாரிப்பாளர் தாணு, என்ன ஆச்சு என்று கேட்டுள்ளார். நடந்ததை வடிவேலுவும் கூற பின் கேட்ட ரூ.25 ஆயிரம் சம்பளத்தை தாணு சம்பளமாக கொடுத்து ஆறுதல்படுத்தியிருக்கிறார்.
என்கிட்ட கேட்காம அவர்கிட்ட ஏன்பா கேட்ட, இனி என்னிடமே கேள் என்று கலைப்புலி தாணு கூறியிருக்கிறார். இந்த சம்பவம் பற்றி தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவே பேட்டியொன்றில் பகிர்ந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.