பிரபல இயக்குனரை தூக்கி எறிந்த ஜெயலலிதா.. அவர் இல்லாமல் வெற்றி கண்ட பாரதிராஜா
தமிழ் திரையுலகில் மூத்த முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பாரதிராஜா. இவர் முதன் முதலில் 16 வயதினிலே எனும் படத்தை இயக்கி, தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். ஆனால், இப்படத்தை இயக்குவதற்குமுன் இவர் வேறொரு கதையை தான், இயக்குவதாக இருந்தாராம். ஆம், அந்த படத்தின் கதையை கூட, நடிகை ஜெயலலிதாவிடம் கூறி, நடிப்பதற்காக சம்மதமும் வாங்கியுள்ளார்.
கதையை கேட்டுவிட்டு, சூப்பராக இருக்கிறது. இந்த படம் வெளிவந்தால், இதுவே இந்த ஆண்டின் சூப்பர்ஹிட் படமாக அமையும் என்று ஜெயலலிதா, பாரதிராஜாவிடம் கூறியுள்ளாராம். ஆனால், இதன்பின் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக இப்படத்தில் நடிக்கமாட்டேன் என்று ஜெயலலிதா கூறிவிட்டாராம். இதனால், தனது முதல் படத்தை பாரதிராஜா வால் இயக்கமுடியாமல் போய்விடுகிறது.
இதன்பின் தான், கமல், ஸ்ரீதேவி, ரஜினிகாந்தை வைத்து 16 வயதினிலே எனும் படத்தை இயக்கி, அறிமுகம் ஆகிறார் பாரதிராஜா. இதன்பின் பாரதிராஜா இயக்கத்தில், ஜெயலலிதாவை வைத்து எடுக்க முடியாமல் நிறுத்திய, அந்த திரைப்படத்தை அவர் எடுக்க முடிவு செய்தார்.
ஏவிஎம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் பாரதிராஜா இயக்கத்தில் புதுமைப் பெண் என்ற பெயரில் அப்படம் வெளியானது. ரேவதி, பாண்டியன் நடித்திருந்த இப்படத்தில் ரேவதியின் கதாபாத்திரம் பலரையும் வியக்க வைத்தது. இப்படம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்று பாரதிராஜாவுக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.