இயக்குநர் பாரதிராஜாவுக்கு என்ன பிரச்சனை!! மருத்துவமனை வெளியிட்ட உண்மை தகவல்..
பாரதிராஜா
ஒரு வாரத்திற்கு முன் பாரதிராஜா, உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து ஓய்வில் இருந்து வரும் அவருக்கு வீசிங் போன்ற சுவாச பிரச்சனை ஏற்பட்டதால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

மருத்துவமனை
இந்நிலையில், பாரதிராஜா உடல்நிலை குறித்து மருத்துமனை தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், இயக்குநர் பாரதிராஜா கடுமையான நுரையீரல் தொற்றுக்காரணமாக அனுமதிக்கப்பட்டார்.
தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். உறுப்பு பாதிப்புகளுக்கான அனைத்து உரிய சிகிச்சைகளும் அவருக்கு அளிக்கப்பட்டு வருகிறது. எங்கள் மருத்துவ நிபுணர் குழுவினரால் அவர் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
அவரின் உடல்நிலை சீராகவுள்ளது, இருப்பினும் அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற வேண்டியிருக்கிறது என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சினிமா பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் பாரதிராஜாவை மருத்துமனைக்கு சென்று விசாரித்து வருகிறார்கள்.
