ஜனநாயகன் வருமா வராதா? தீர்ப்பை 9 ஆம்தேதிக்கு ஒத்தி வைத்த நீதிமன்றம்...
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக உருவாகியுள்ள திரைப்படம் ஜனநாயகன். வருகிற 9ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.
இதற்கிடையில் படத்தின் சென்சார் சான்றிதழ் வராததால் படம் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் நீதிபது பி.டி. ஆஷா பல கேள்விகளை தணிக்கை குழுவிடம் கேட்டுள்ளது.

UA சான்றிதழ்
அதில், UA சான்றிதழ் ஒப்புதல் அளித்த குழுவில் இருந்த நபரே எப்படி தனி புகார் அளிக்க முடியும் என்ற கேள்வியை எழுப்பினார். மேலும் இந்த வழக்கில் அனைத்துமே இயல்புக்கு மாறாகவுள்ளது. UA சான்றிதழ் என முடிவு செய்துவிட்டு மறு தணிக்கைக்கு அனுப்பியது ஏன்? என்ற கேள்வியையும் நீதிபதி எழுப்பினார்.
இதற்கு வழக்கமான ஒன்றுதன் என தணிக்கை வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் புதிய தணிக்கை குழு உறுப்பினர்கள் படத்தை இன்னும் பார்க்க வேண்டி இருப்பதால் வழங்கபடவில்லை என்றும் வாதம் வைத்தனர். மேலும் பதில் மனு தாக்கல் செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி தந்தால் அனைத்து கேள்விகளுக்கும் முழுமையாக பதிலளிக்க முடியும் என்றும் அதற்கு 4 வாரங்கள் ஆகும் என்றும் வாதம் வைத்தனர்.

அந்த புகாரில் எனது ஆட்சேபங்கள் பரிசீலிக்கப்படவில்லை என்று தானே கூறப்பட்டிருக்கிறது, எனவே இந்த புகார் நிலைக்கத்தக்கதல்ல என்று நீதிபதி ஆஷா கூற, படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப சென்சார் போர்ட் தலைவருக்கு அதிகாரமுள்ளது.
திரைப்படத்தில் பாதுகாப்புப் படைகளில் சில சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே பாதுகாப்புப் படைகளை சேர்ந்த நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும் என்று தணிக்கை குழு கூறினர்.
அதற்கு நீதிபதி, தணிக்கை வாரியத்தின் டைம்லைனை தயாரிப்பு நிறுவனம் பின்பற்றித்தான் ஆகவேண்டும் கூறினார்.
தணிக்கை குழு உறுப்பினர் புகாரளிப்பது வழக்கத்திற்கு மாறான ஒன்று என்றும் வழக்கமாக விண்ணப்பித்த ஒரு வாரத்தில் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படும், படம் பார்த்த 5 பேரில் ஒருவர் மட்டும் எப்படி புகாரளிக்க முடியும். 500 கோடி முதலீடு செய்து பட எடுத்துள்ளோம் என்றும் பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
தீர்ப்பு
அதற்கு தணிக்கை வாரியம், நாளை மறுநாள் ரிலீஸ் என்று கூறி சான்றிதழ் கேட்க முடியாது என்ற கூறியுள்ளது. குறித்த தேதியில் படம் வெளியிடப்படவில்லை என்றால் பெரும் இழப்பு ஏற்படும் என்றும் தயாரிப்பு நிறுவனம் வாதிட்டுள்ளது.
அப்போது வழக்கை வேறொரு நாளுக்கு ஒத்தி வைக்கலாமா? என நீதிபதி கேள்வி எழுப்பியப்பின் ஜனவரி 9 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளது உயர் நீதிமன்றம். படம் 9 ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் காலையில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இதனால் ஜனநாயகன் படம் திட்டமிட்டபடி ரிலீஸாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.