இந்த வயசில் பாரதிராஜாவுக்கு இப்படி ஒரு ஆசையா

Lokesh Kanagaraj Bharathiraja
By Parthiban.A Aug 01, 2022 03:30 PM GMT
Report

இயக்குனர் பாரதிராஜாவை தெரியாதவர்கள் தமிழ் சினிமாவில் இருக்க முடியாது. மண்வாசனையோடு கிராமத்து கதை கொண்ட படங்களை எடுத்து ரசிகர்களை ஈர்த்தவர் அவர்.

பாரதிராஜா தற்போது 45 வருடங்களை சினிமாவில் கடந்து இருக்கிறார். அதற்காக அவருக்கு பத்திரிகையாளர் சங்கம் விழா நடத்தி இருக்கிறது. அதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜும் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய பாரதிராஜா லோகேஷ் கனகராஜை பாராட்டினார். விக்ரம் படம் பற்றி பேசி பாராட்டிய பாரதிராஜா, எனக்கும் அவருடன் போட்டி போட்டு ஒரு படம் எடுக்க வேண்டும், அதற்காக பாராட்டு பெற வேண்டும் என ஆசை இருக்கிறது என கூறி இருக்கிறார்.

இந்த வயசில் பாரதிராஜாவுக்கு இப்படி ஒரு ஆசையா | Bharathiraja Wants To Compete Lokesh Kanagaraj

நான் 40 படங்களில் செய்ததை லோகேஷ் கனகராஜ் 4 படங்களில் செய்து காட்டிவிட்டார் என்றும் அவர் பாராட்டி இருக்கிறார்.

79 வயதில், உடல்நிலை சரியில்லாத நிலையிலும் பாரதிராஜா லோகேஷ் உடன் போட்டி போட நினைப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.