10 வருட திருமண வாழ்க்கை! குழந்தை பற்றி கேட்டவருக்கு நாயை காட்டிய தொகுப்பாளினி..

child married Bhavana
By Jon Mar 05, 2021 03:41 PM GMT
Report

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் விஜே பாவனா. பிரபல தொலைக்காட்சியில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ஜோடி நம்பர் 1 உள்ளிட்ட நிகழ்ச்சிளை தொகுத்து வழங்கினார். அதிலிருந்து பிரமோஷன் வாங்கியப்பின் கிரிக்கெட் துறையில் ஸ்டார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

தற்போது கணவருடன் மும்பையில் செட்டிலாகி இருக்கும் பாவனா அவ்வப்போது நடனம், போட்டோஹுட் என புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கூட ‘இரண்டாம் குத்து’ படத்தில் ஒரு பாடலை பாடி இருந்தார் பாவனா. பலருக்கும் பாவனாவுக்கு திருமணம் ஆகியிருப்பது பற்றி தெரியாது. ஆனால் விஜே பாவனாவிற்கு திருமணமாகி 10 வருடங்களாகிறதாம்.

10 ஆண்டுகள திருமண வாழ்க்கையில் பாவனாவிற்கு இன்னும் குழந்தை இல்லை. இதுபற்றி நேரலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர், உங்களுக்கு குழந்தை இருக்கா என்று கேட்க, அதற்கு தவறு, எனக்கு ஒரு சகோதரர் இருக்கிறார் என்று கூறி அவரின் நாயுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


GalleryGallery