பெண்களுக்கு சினிமாவில் இடம் குறைகிறது..ஆனால்!! நடிகை பூமி பட்னேகர் ஓபன் டாக்..
Bollywood
Indian Actress
Actress
OTT Platforms
By Edward
பூமி பட்னேகர்
பாலிவுட்டில் தம் லகா கே ஹைசா, சாண்ட் இ ஆங்க், சோஞ்சிரியா, பதாய் ஹோ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் பூமி பட்னேகர்.
டாப் நடிகையாக பாலிவுட்டில் திகழ்ந்து வரும் பூமி பட்னேகர், சமீபத்தில் நடந்த இண்டர்நேஷனல் ஃபிலிம் பெஸ்டிவல் டெல்லி 2026 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

பெண்களுக்கு சினிமாவில்
அதில், சினிமாவில் பெண்களை மையமாக கொண்ட கதைகள் குறைந்து வருகிறது. இது மிகவும் மனவேதனையளிக்கிறது.
ஆனால் ஓடிடி தளங்கள் பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குகின்றனர். அதில் பெண்களுக்கு பல வகையான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. ஓடிடி தளங்கள் அவர்களுக்கு சரியான மேடையாகவுள்ளது பூமி பட்னேகர் தெரிவித்துள்ளார்.