நடுஇரவில் என்னால் தூங்கவே முடியல!! மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை பூமிகா..
பூமிகா சாவ்லா
விஜய் நடிப்பில் வெளிவந்த 'பத்ரி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூமிகா சாவ்லா. இதன்பின் சூர்யா நடிப்பில் வெளியான 'சில்லுனு ஒரு காதல்' திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அளவில் பெயரை பெற்று தந்தது.
தமிழில் மட்டுமின்றில், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய பல மொழிகளில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

கடந்த 2007ஆம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகை பூமிகாவிற்கு ஒரு மகன் உள்ளார். இதனையடுத்து மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ள பூமிகா, சமீபத்தில், பிரதர், ஸ்கூல் என்ற படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் சரா அர்ஜுன் நடித்துள்ள Euphoria என்ற தெலுங்கு படத்தில் பூமிகாவும் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். இப்படம் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி ரிலீஸானது. படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது பூமிகா கண்ணீர்விட்டு மேடையில் அழுந்துள்ளார்.

தூங்கவே முடியல
பூமிகா பேசும்போது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து இப்படம் பேசுகிறது. இப்படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் என்னை வெகுவாக பாதித்துள்ளது. அதன்காரணமாக இரவு 1 மணி அல்லது 2 மணிக்கு எல்லாம் தூக்கத்தில் இருந்து விழித்துவிடுகிறேன்.
அந்தளவிற்கு இக்கதாபாத்திரம் என்னை பாதித்துவிட்டது என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே கண்ணீர் விட்டு அழுதுள்ளார் பூமிகா.