சண்டைனு வந்துட்டா சட்ட கிழியத்தான செய்யும்! விஜய் 300 கோடிக்கு ஆப்பா..
கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி கொடுத்துள்ளது. இதனால் பெரிய பட்ஜெட் படங்களின் மார்க்கெட் அடிவாங்கும் என்று தள்ளி வைத்தனர்.
கொரோனா வைரஸ் சாதகமான சூழல் வரும் போது வெளியிடலாம் என்று எதிர்பார்த்த நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் ஏப்ரல் 14ல் வெளியாக திட்டமிட்டுள்ளனர் படக்குழு. நெல்சன் இயக்கத்தில் சன் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு போட்டியாக அக்கடதேசத்து பெரிய பட்ஜெட் படங்களும் ரிலீசாகவுள்ளதாம்.
கேஜிஎஃப் 2, பாலிவுட் நடிகர் அமீர்கான் மற்றும் நாக சைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள லால் சிங் சட்டா படமும் அன்று வெளியாக இருக்கிறதாம். மேலும் வலிமை, ராதேஷாம், ஆர் ஆர் ஆர் உள்ளிட்ட படங்களும், டான் எதற்கும் துணிந்தவன் உள்ளிட தமிழ் படங்களில் அடுத்தடுத்த மாதங்களில் வெளியாகவுள்ளது.
இதனால் விஜய்யின் பீஸ்ட் படத்தின் மார்க்கெட்டுக்க்கும் வியாபாரத்திற்கு சிக்கல் வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.