விவாகரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை!! பெரிய விசயத்தில் நயன் தாராவை லாக் செய்த விக்னேஷ் சிவன்..
இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன் தாராவை காதலித்து 2022ல் திருமணம் செய்து அதே ஆண்டில் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றெடுத்தனர். இரு குழந்தைகளின் புகைப்படங்களோடு அவர்களது பிறந்தநாளை கொண்டாடியும் வந்தனர். அதே சமயம் நயன், விக்னேஷ் சிவனுடன் ரொமான்ஸ் செய்து புகைப்படங்களையும் பகிர்ந்து வந்தார். அப்படி இருக்கையில் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.

ஆரம்பத்தில் இருவரும் காதலிக்கிறார்கள் என்ற செய்தி வெளியான போது வழக்கம் போல் இவரையும் நயன் கழட்டிவிட்டு விடுவார் என்று பேசப்பட்டது. அதன்பின் நயன் தாரா கல்யாணத்தின் போது அவ்வளவு தான் நயன் தாராவின் மார்க்கெட் காலி என்றும் ஒரு குழந்தை பிறந்தவுடன் காலி ஆகிவிடுவார் என்றும் பேசப்பட்டது.
இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் பிசினஸ்கள், படங்கள் என்று பல வெற்றியை நயன் தாரா பெற்று வருகிறார். என்னதான் நினைத்தாலும் விக்கியை கழட்டிவிட முடியாது என்று கூறும் அளவிற்கு வெளிநாட்டுக்கு சென்று ரொமாண்டிக் புகைப்படங்களை வாரிக்குவித்து வருகிறார் நயன் தாரா.

இப்படி விவாகரத்து செய்யப்போகிறார்கள் என்ற வதந்திகள் வெளியில் வந்தாலும் அது ஒருபோதும் நடக்காது என்று ஒரு தகவல் லீக்காகியுள்ளது. அதாவது பல தொழில்கள் ஆரம்பித்து பல சொத்துக்களை சேர்க்க ஐடியா கொடுத்ததே விக்னேஷ் சிவன் தானாம்.
நயன் கஷ்டப்பட்டு சம்பாதித்து சேர்த்த அத்தனை முதலீட்டிலும் விக்னேஷ் சிவனின் பார்ட்னர்ஷிப் இருக்கிறது. ஒவ்வொரு தொழில் நிறுவனத்திலும் விக்னேஷ் சிவன் பவுண்டராகவும், கோ பவுண்டராக நயன் தாராவும் இருப்பார். அதேபோல் பவுண்டராக நயன் தாரா இருந்தாலும் விக்னேஷ் சிவன் கோ பவுண்டராக இருப்பாராம். அதனால் தான் இருவருக்கும் விவாகரத்து என்ற பேச்சிற்கே வாய்ப்பில்லை என்று கூறப்பட்டு வருகிறது.