பிக் பாஸ் 10 நிகழ்ச்சிக்காக விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம்

Vijay Sethupathi Bigg Boss 10 Tamil
By Karthick Raja Sep 27, 2026 03:26 AM GMT
Report

நடிகர் கமல் ஹாசனுக்கு பிறகு பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் விஜய் சேதுபதி.

8-வது சீசனில் தொடங்கிய இவருடைய பயணம் தற்போது 10-வது சீசன் வரை வந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் பிக் பாஸ் 10 தமிழ் தொடங்கிய நிலையில், ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பிக் பாஸ் 10 நிகழ்ச்சிக்காக விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம் | Bigg Boss 10 Vijay Sethupathi Salary

மேலும், சமீபத்தில் விஜய் சேதுபதி பேசிய விஷயங்கள் சர்ச்சைக்குள்ளான நிலையில், அதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மீது அதிக கவனம் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், பிக் பாஸ் 10 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் விஜய் சேதுபதி, இதற்காக வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக நடிகர் விஜய் சேதுபதி ரூ. 70 - 80 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

பிக் பாஸ் 10 நிகழ்ச்சிக்காக விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம் | Bigg Boss 10 Vijay Sethupathi Salary