அனிருத்தை உருவாக்கிய தனுஷுக்கே அழைப்பு இல்லையா..

Dhanush Anirudh Ravichander
By Tony Nov 23, 2026 07:30 AM GMT
Report

அனிருத் இன்று இந்திய சினிமாவின் நம்பர் 1 இசையமைப்பாளர். எந்த மாஸ் ஹீரோ படங்கள் என்றாலும் அனிருத் இருந்தால் அவர்களின் ஓப்பனிங் பல மடங்கு அதிகமாகிறது.

ஏன் இன்றைய முதல்வர் விஜய் கூட கத்தி, மாஸ்டர், பீஸ்ட், லியோ, ஜனநாயகன் என அனிருத் இசையில் நடித்து பல இளைஞர்களை பாடல்கள் மூலம் கவர்ந்தார்.

அனிருத்தை உருவாக்கிய தனுஷுக்கே அழைப்பு இல்லையா.. | Anirudh Doesnt Invite Dhanush For His Wedding

அப்படிப்பட்ட அனிருத்தை 3 படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் தனுஷ், அதோடு இல்லாமல் எதிர்நீச்சல், காக்கிசட்டை என தன் தயாரிப்பு படங்களுக்கும் இசையமைக்க வைத்தார்.

அப்படிப்பட்ட தனுஷை அனிருத் திருமணத்திற்கு அழைக்கவில்லையா, அதனால் தான் அவர் வரவேற்பு நிகழ்ச்சிக்கு கூட வரவில்லையா என ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர். தனுஷ் சமூக வலைத்தளத்தில் கூட எந்த ஒரு வாழ்த்தும் கூறாதது குறிப்பிடத்தக்கது