பிக் பாஸ் நடிகை திடீர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

Bigg Boss Death
By Kathick Jun 28, 2025 02:30 AM GMT
Report

இந்திய அளவில் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். கோலிவுட் முதல் பாலிவுட் வரை இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் பிக் பாஸ் 13ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ஷெஃபாலி ஜரிவாலா.

பிக் பாஸ் நடிகை திடீர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Bigg Boss 13 Shefali Jariwala Died In Heart Attack

பிக் பாஸ் மட்டுமின்றி Boogie Woogie, Nach Baliye 5 மற்றும் 7 ஆகிய நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், புகழ் பெற்ற Kaanta Laga எனும் பாடலில் இவர் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வந்த நடிகை ஷெஃபாலி ஜரிவாலா திடீரென மரணமடைந்துள்ளார். இந்த செய்தி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் வயது 42.

பிக் பாஸ் நடிகை திடீர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Bigg Boss 13 Shefali Jariwala Died In Heart Attack

நடிகை ஷெஃபாலி ஜரிவாலாவிற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவரை உடனடியாக மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஷெஃபாலி ஜரிவாலாவின் மரணத்திற்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது இரங்கலை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள். 

பிக் பாஸ் நடிகை திடீர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Bigg Boss 13 Shefali Jariwala Died In Heart Attack