பிக் பாஸ் ஐஷுவுக்கு வெளியில் ஏற்கனவே இருக்கும் காதலர் இவரா? முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் தான்
பிக் பாஸ் ஷோ என்றால் சண்டை சச்சரவு ஒருபுறம் மற்றும் காதல் விஷயங்கள் இன்னொரு புறம் என இருப்பது வழக்கமான ஒன்று தான். ஆனால் இப்போது நடந்துவரும் பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளர்கள் சிலர் காதல் லீலைகளில் எல்லைமீறி சென்று கொண்டிருக்கின்றனர்.
குறிப்பாக ஐஷு மற்றும் நிக்சன் ஆகியோர் ரொமான்ஸ் செய்யும் வீடியோக்கள் வெளியாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது ஐஷுவுக்கு ஏற்கனவே வெளியில் ஒரு காதலர் இருக்கிறார் என்கிற தகவலும் பரவி வருகிறது.
காதலர் யார்
ஐஷுவுக்கு வெளியில் இருக்கு காதலரை வெறும் மூன்று மாதமாக தான் தெரியும் எனவும் அவரே கூறி இருக்கிறார். அவரும் பிக் பாஸில் இருந்திருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிக் பாஸ் 5ம் சீசனில் போட்டியாளராக வந்த நிரூப் நந்தகுமார் தான் அவரது காதலர் என ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் அது பற்றி உறுதியான தகவல் இல்லை என்றாலும் நெட்டிசன்கள் ஐஷுவை இதற்காக ட்ரோல் செய்து வருகின்றனர்.