இந்த முறை மிக்சர் சிக்கவில்லையா.... கலாய்க்கும் ரசிகர்கள்
Saravanan
Tamil TV Shows
By Yathrika
பிக்பாஸ் 7
விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் 7 நிகழ்ச்சிகளில் போட்டிபோடும் சிலரை ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள். அதில் ஒருவர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் கண்ணன்.
இவர் அவ்வளவாக விளையாடவில்லை, தனியாக வெளியே தெரியவில்லை, வெறும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இந்த வார நாமினேஷனில் அவர் சிக்குவார் என சில ரசிகர்கள் எதிர்ப்பார்க்க கடைசியில் அது நடக்கவில்லை.
எனவே ரசிகர்கள் சிலர் அட எலிமினேஷனில் மிக்சர் சிக்குவார் என்று பார்த்தால் இல்லையே என நிறைய காமெடி பதிவுகள் போட்டு வருகிறார்கள்.