பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்.. இந்த வார எலிமினேஷன்
பிக் பாஸ் 8 விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக டபுள் எலிமினேஷன் நடந்து வரும் நிலையில், இந்த வாரமும் டபுள் எலிமினேஷன் என கூறப்படுகிறது.
சில வாரங்களே மீதம் உள்ள நிலையில், 13 போட்டியாளர்கள் வீட்டிற்குள் உள்ளனர். இதனால் தொடர்ந்து மூன்றாவது வாரமும் டபுள் எலிமினேஷன் என்கின்றனர்.
இந்த நிலையில், இந்த வாரம் முதலில் வெளியேறிய போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரஞ்சித் பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறியுள்ளார். கடந்த சில வாரங்களாகவே, இவர் ஏன் இன்னும் இந்த வீட்டிற்குள் இருக்கிறார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இவர் வீட்டிற்குள் என்ன செய்தார் என்றும் கேட்டனர். அதற்கு பதில் கொடுக்கும் விதமாக இந்த வாரம் நடந்த போட்டியில் கடுமையாக போட்டியிட்டார். ஆனால், தற்போது மக்களிடம் இருந்து குறைவான வாக்குகள் பெற்ற நிலையில், வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார் தகவல் தெரிவிக்கின்றனர்.