இந்த வாரம் 2 விக்கெட்டை தூக்கிய பிக்பாஸ் 9!! யார் யார் தெரியுமா?

Star Vijay Bigg boss 9 tamil Ramya Joo
By Edward Nov 07, 2025 11:30 AM GMT
Report

பிக்பாஸ் 9

பிக்பாஸ் சீசன் 9 கடந்த அக்டோபர் 5 ஆம் தேதியில் இருந்து விஜய் சேதுபதி தலைமையில் ஒளிப்பரப்பாகி வருகிறது. 20 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் அனுப்பட்ட நிலையில் இதுவரை, நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா சிஜே, ஆதிரை, கலையரசன் போன்றவர்கள் வெளியேறினர்.

இந்த வாரம் 2 விக்கெட்டை தூக்கிய பிக்பாஸ் 9!! யார் யார் தெரியுமா? | Bigg Boss 9 This Week Evicted 2 Person Revealed

இதனையடுத்து கடந்த வாரம் 4 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் பிக்பாஸ் 9 வீட்டிற்குள் உள்ளே வந்து காரசாராமான கேள்விகளை கேட்க ஆரம்பித்தனர்.

மேலும் ஹோட்டல் டாஸ்க் நடந்து கொண்டிருக்கும் நிலையில், சிறப்பு விருந்தினராக தீபக், பிரியங்கா, மஞ்சரி ஆகீயோரை போட்டியாளர்கள் சிலர் சங்கடத்தில் ஆழ்த்தினர்.

சரும பிரச்சனையால் கெமி வீட்டைவிட்டு வெளியேறி மருத்துவ சிகிச்சை பெற்று மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வரவுள்ளார்.

டபுள் எவிக்‌ஷன்

இந்நிலையில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருப்பதாகவும் அதில் ரம்யா மற்றும் துஷார் ஞாயிற்றுக்கிழமை எபிசோட்டில் எவிக்ட் செய்யவுள்ளார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.