ஆனது ஆச்சு போனது போச்சு.. வழக்கமான வேலையை தொடங்கிய அபினை
நடிகர் ஜெமினி கணேசன் சினிமாவில் காதல் மன்னன் என பெயர் எடுத்தவர். அவரது பேரன் அபினை வட்டி தமிழ் பிக் பாஸ் 5ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். அவர் ஆரம்பத்தில் இருந்தே பிக் பாஸ் வீட்டில் பாவனிக்கு லவ் டார்ச்சர் கொடுத்து வந்திருக்கிறார்.
அவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கிறார்கள் என்பதால் தான் இந்த விஷயத்தை பற்றி வெளிப்படையாக பேசவில்லை என பாவனி கூறி இருந்தார். 'உன்னை பிடிச்சிருக்கு' என லெட்டர் எழுதி கொடுத்தது தொடங்கி பாவனியை விடாமல் கூட சுற்றி டார்ச்சர் செய்து கொண்டு இருந்த நிரூப்புக்கு இறுதியில் வெடித்த பிரச்சனை தான் முற்றுப்புள்ளி வைத்தது.
அவர் எலிமினேட் ஆகி வெளியில் வரும்போது கூட பாவனியை பார்த்துக்கொள் என அமீரிடம் கூறிவிட்டு தான் வந்தார். வெளியில் வந்த பிறகு அவரது மனைவி அபர்ணா அவருடன் சண்டை போட்டு பிரிந்திருப்பதாக தெரிகிறது. அவர்கள் விவாகரத்து செய்ய போவதாக கூட தகவல் சமீபத்தில் பரவி வருகிறது.
பாவனி விவகாரத்தால் மானம் போச்சு, மனைவி உடன் சண்டை.. இப்படி பல பிரச்சனைகள் நடந்திருந்தாலும் அபினை 'ஆனது ஆச்சு, போனது போச்சு' என வழக்கம்போல அவர் விவாசாயம் செய்யும் இடத்திற்கு சென்று வேலையை பார்க்க தொடங்கி இருக்கிறார்.
"Back to what I love doing" என அவர் குறிப்பிட்டு இன்ஸ்டாவில் போட்டோக்கள் வெளியிட்டு இருக்கிறார்.