முதல் மனைவியுடன் விவாகரத்தில் முடிந்த திருமணம்!! புது காதலியுடன் நெருக்கமாக இருக்கும் பிக்பாஸ் பிரபலம்..
திரைத்துறையில் வெளியாகும் படங்களை விமர்சித்து பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் அபிஷேக் ராஜா. முன்னணி நடிகர்களின் படங்களை விமர்சித்தும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கருத்துக்களை பதிவிட்டும் பிரபலமாகினார். இமைக்கா நொடிகள் படத்தில் சிறு ரோலில் நடித்தும் இருக்கிறார் அபிஷே ராஜா.

அதன்பின் பிக்பாஸ் 5 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு 2 முறை எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறினார். தீபா நடராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்ட அபிஷேக் ராஜா, மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக சமீபத்தில் தெரிவித்தார்.
இதுகுறித்து அவரது முன்னாள் மனைவியும் தங்களின் விவாகரத்து பற்றிய விளக்கங்களையும் தன்னை பற்றிய செய்திகளை பகிரவேண்டாம் என்று கூறியும் ஒரு பதிவினை போட்டிருந்தார்.
இந்நிலையில் அபிஷேக் ராஜா தற்போது காதலர் தினத்தன்று தன்னுடைய புதிய காதலியை அறிமுகப்படுத்தி இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். இதற்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.