எனது உயிரை விட முடிவெடுத்துவிட்டேன்.. பிக் பாஸ் ஐஷு உருக்கமான பதிவு
கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஐஷு வெளியேறினார். இவர் ஆரம்பத்தில் பிக் பாஸில் அருமையாக விளையாடினாலும் நாட்கள் செல்ல நிக்சன் உடன் சேர்ந்து ரொமான்ஸில் ஈடுபட்டார்.
அதுமட்டுமின்றி பிரதீப்கு எதிராக ரெட் கார்ட் தூக்கியதால் அதிக எதிர்ப்பையும் சம்பாரித்தார்.
இந்நிலையில் தற்போது ஐஷு உருக்கமான பதிவு ஒன்றை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதில், ரசிகர்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னை நம்பியவர்களை ஏமாற்றிவிட்டேன். பிக் பாஸ் வீட்டில் காதல், நட்பு போன்றவற்றால் என் கண்கள் மறைத்துவிட்டது.
என்னை குறித்து என்ன வேண்டுமென்றாலும் பேசுங்கள் ஆனால் என் குடும்பத்தை மட்டும் விட்டுவிடுங்கள். நான் என்னுடைய குடும்பத்துக்கே அவமானம்.
எனது உயிரை விட முடிவு செய்துவிட்டேன். ஆனால் என் மீது பெற்றோர் வைத்திருக்கும் கடைசி நம்பிக்கைக்காகத்தான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்.
நான் தவறு செய்த போது என்னை காப்பற்ற முயன்ற யுகேந்திரன், விசித்திரா, அர்ச்சனா, மணி, பிரதீப் ஆகியோரிடமும் மன்னிப்பு கேட்கிறேன். பிரதீப் எதிராக நான் ரெட் கார்ட் தூக்கியதற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று ஐஷு பதிவிட்டுள்ளார்.
You May Like This Video