இது எனக்கு செட்டே ஆகாது!! அந்த படத்தால் விபரீத முடிவை எடுத்த பிக்பாஸ் பிரபலம்..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்நிகழ்ச்சி மூலம் பல பிரபலங்கள் சினிமாத்துறையில் நல்ல இடத்தை பிடித்து வருகிறார்கள். அந்தவகையில் பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமான பாலாஜி முருகதாஸ் சமீபத்தில் ஒரு முடிவை எடுத்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு கடைசி வரை வந்த பாலாஜி அதன்பின் ஆரம்பித்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னாரானார். இதன்பின் ஒருசில படங்களில் நடித்து வந்த பாலாஜி, தயாரிப்பாளரும் நடிகருமான ஜே.
சதீஷ்குமார் இயக்கத்தில் ஃபயர் என்ற படத்தில் நடித்து வந்துள்ளார். இப்படத்தின் நடிகை ரச்சிதா மகாலட்சுமி, சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வந்துள்ளனர். இப்படத்தின் சில சீன்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில் அடுத்தக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முக்கிய ரோலில் நடித்த பாலாஜிக்கு தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து ஒரு சிங்கிள் பேமெண்ட் கூட தரவில்லையாம்.
இதுகுறித்து அவரது பதிவில், நான் சினிமாவை விட்டு விலகுகிறேன். ஏனென்றால் ஃபயர் படத்தில் நடித்ததற்காக தயாரிப்பாளர் ஒரு ரூபாய் கூட எனக்கு சம்பளமாக தரவில்லை என்று அந்த பதிவில் கூறியிருக்கிறார்.