பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் முன் பிரவீன் காந்தி செய்த காரியம்.. கடுப்பான விஜய் சேதுபதி!
பிக் பாஸ் 9
பிக் பாஸ் 9 கடந்த வாரம் பிரம்மாண்டமாக துவங்கியது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க 20 போட்டியாளர்கள் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்தனர்.
இதில் மனதளவில் தன்னால் இந்த வீட்டில் இருக்க முடியாது என்று கூறி நந்தினி தானாகவே வெளியேறினார். அதை தொடர்ந்து, கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டு வீட்டிலிருந்து பிரவீன் காந்தி வெளியேறினார்.
செய்த காரியம்!
வழக்கமாக ஒரு போட்டியாளர் எலிமினேட் ஆனால் அவர் வெளியேறும்போது மற்ற போட்டியாளர்களள் இறுதிவரை உடன் வந்து வழியனுப்புவார்கள்.
ஆனால் பிரவீன் காந்தி அப்படி யாரும் எனக்கு வரவேண்டாம், உள்ளே போங்க என சொல்லி எல்லோரையும் உள்ளே அனுப்பினார்.மேலும் விஜய் சேதுபதி உடன் பேசும்போது 'நான் எலிமினேட் ஆகவில்லை.
நான் எங்கும் இருப்பேன். மேடையிலும் இருப்பேன், உள்ளே வீட்டிலும் இருப்பேன்' என கூறினார். அவர் வீட்டில் இருப்பவர்களிடம் ஒரு bye கூட சொல்லாமல் வெளியில் வந்தார். பிரவீன் காந்தி பேசிவிட்டு கிளம்பி சென்றபின் விஜய் சேதுபதி அதை சொல்லி கலாய்த்தார்.