அவரை மட்டுமேதான் காதலித்தேன்..சேனலின் சதி..ரெட் கார்ட் பெண் போட்டியாளர் ஓபன் டாக்..
கம்ருதீன் - பார்வதி
பிக்பாஸ் சீசன் 9-ல் ரெட் கார்ட் வாங்கி வெளியேறிய போட்டியாளர்கள் கம்ருதீன் - பார்வதி ஜோடிகள் தற்போது காதலர்களாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப்பின் வெளியில் உலா வருகிறார்கள். சமீபத்திய பேட்டியின்றில் பார்வதி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் உண்மையான முகத்தை பற்றி கூறியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை எந்தவொரு ஆண் போட்டியாளரும் என்னைப்போல் இவ்வளவு மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டது இல்லை. அந்த வீட்டில் தான், ஒரு ஆண்(கம்ருதீன்) மட்டுமே காதலித்தேன், அவரிடம்தான் நெருக்கமாக இருந்தேன்.
சேனலின் சதி
இந்நிகச்சியை விட்டு வெளியே வந்தப்பின் அவருடன் தான் தொடர்ந்து நெருக்கமாக இருக்கிறேன். ஆனால் என்னைப்பற்றியும் என் உறவைப்பற்றியும் வெளியே பலரும் மிகவும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்தனர். ஒரு பெண் ஒருவரை மட்டுமே காதலித்து, அவருடன் மட்டுமே உறவில் இருந்தாலும், அப்பெண்ணை வேறுமாதிரியான, கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சிப்பார்கள்.

ஆனால், ஆண்களின் இதேமாதிரியான செயல்கலை இந்த சமூகம் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறது. வலைமைகளை பெண்களை சமாளிக்கவும், அவர்களை ஏற்றுக்கொள்ளவும் முடியாத ஆணாதிக்க மனநிலைதான் இதற்கு காரணம் என்று ஓபனாக பேசியுள்ளார். பிக்பாஸ் சீசன் 10 60 நாட்களை ஓடிய நிலையில் பார்வதி பகிர்ந்து கொண்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.