2 நாட்களில் கருப்பு திரைப்படம் செய்துள்ள பாக்ஸ் ஆபிஸ் வசூல்

Suriya Box office
By Karthick Raja Nov 08, 2026 09:51 AM GMT
Report

கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் என தொடர் வெற்றிக்கு பின் இந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள மூன்றாவது திரைப்படம் சீன். மலையாள திரையுலகில் 'ஆவேசம்', 'ரோமன்சம்' போன்ற சூப்பர்ஹிட் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ஜீது மாதவன் சீன் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

இப்படத்தில் முதல்முறையாக சூர்யாவுடன் இணைந்து நஸ்ரியா நடித்திருக்கிறார். மேலும், மலையாளத்தில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகர் நஸ்லன் தமிழில் களமிறங்கியுள்ளார்.

2 நாட்களில் கருப்பு திரைப்படம் செய்துள்ள பாக்ஸ் ஆபிஸ் வசூல் | Scene Movie 2 Days Box Office

கடந்த 6-ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் வசூலில் பட்டையை கிளப்பி வரும் சீன், இதுவரை உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 2 நாட்களில் சீன் திரைப்படம் உலகளவில் ரூ. 87+ கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும், சீன் திரைப்படத்தின் வசூல் குறித்து இதில் பதிவிடப்பட்டுள்ள தகவல், அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.