கதறி அழுத ஜாக்குலின், சிரித்து வெறுப்பேற்றிய போட்டியாளர்கள்.. வைரலாகும் வீடியோ

Vijay Sethupathi TV Program Bigg Boss Tamil 8
By Bhavya Jan 17, 2025 07:30 AM GMT
Report

பிக்பாஸ் 8

விஜய் டிவியில் பிரம்மாண்டத்தின் உச்சமாக கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ் 8. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இப்போது பணப்பெட்டி டாஸ்க் நடந்து வருகிறது.

முத்துக்குமரன், ராயன், விஷால், பவித்ரா ஆகியோர் பணப்பெட்டி டாஸ்க்கில் ஜெயித்துள்ளார்கள். ஆனால் இந்த பணப்பெட்டி டாஸ்க்கில் போட்டிபோட்ட ஜாக்குலின் 8 லட்சத்துக்கான பணப்பெட்டியை எடுக்க முடியாமல் எலிமினேட் ஆனார்.

கதறி அழுத ஜாக்குலின், சிரித்து வெறுப்பேற்றிய போட்டியாளர்கள்.. வைரலாகும் வீடியோ | Bigg Boss Contestants Viral Video

போட்டியில் ஜெயிக்கவில்லை என்றால் பிக்பாஸ் 8 வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்பதால் ஜாக்குலின் வீட்டைவிட்டு கதறி அழுதபடி வெளியேறியுள்ளார்.

மற்ற போட்டியாளர்களும் இவர் வெளியேறுவதை கண்டு கஷ்டப்பட்டனர், ஆனால் சில போட்டியாளர்கள் மட்டும் அவர் வெளியேறும் போது சிரித்துக்கொண்டு இருந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

அதனை கண்ட ரசிகர்கள் அவர்களின் கோபத்தை வெளிக்காட்டி வருகின்றனர். இதோ வீடியோ,