பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பல லட்சத்துடன் வெளியேறிய போட்டியாளர்.. செம ட்விஸ்ட்
Kamal Haasan
Bigg Boss
By Kathick
கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் வெளியேற போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்தார்கள். இதில் ஏ.டி.கே தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் திடீரென ரசிகர்களுக்கு பிக் பாஸ் செம ட்விஸ்ட் கொடுத்துள்ளார். ஆம், ஏ.டி.கே வெளியேறுவார் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், ஜனனி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ள ஜனனி ஒரு நாளைக்கு 21 ஆயிரம் முதல் 26 ஆயிரம் ரூபாய் வரை சம்பளமாக வாங்கியுள்ளார். இதன்முலம் மொத்தமாக 17 முதல் 18 லட்சம் ரூபாய் வரை ஜனனிக்கு சம்பளமாக தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.