நீ எந்த தொகுதியில் போட்டி..சீக்கிரம் சொல்லு!! விஜய்யை தாக்கி பேசிய ஜூலி..

Vijay Maria Juliana Thamizhaga Vetri Kazhagam
By Edward Mar 28, 2026 08:15 AM GMT
Report

ஜூலி - விஜய்

நடிகர் விஜய்யின் பரப்புரை பேச்சை கேட்டப்பின் பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான ஜூலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

ஜூலியின் வீட்டியோவின் கமெண்ட் செக்‌ஷன் மட்டுமில்லாமல் சமூகவலைத்தளங்கள் அனைத்திலும் விஜய் ரசிகர்களும் தவெக ஆதரவாளர்களும் ஜூலி மற்றும் அவரது குடும்பத்தினரை மோசமாக விமர்சித்ததால் காவல் நிலையத்தில் புகாரளித்தார் ஜூலி.

நீ எந்த தொகுதியில் போட்டி..சீக்கிரம் சொல்லு!! விஜய்யை தாக்கி பேசிய ஜூலி.. | Bigg Boss Fame Julie Slams Thalapathy Vijay

இதனையடுத்து தஞ்சாவூர் கூட்டத்தில் விஜய் கலந்து கொண்ட சென்றபோது விக்னேஷ் என்ற மாணவர், விஜய் வாகனத்தை இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்றபோது சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த காவல்துறை வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளாகினார். இதனை கண்டித்து ஜூலி ஒரு வீடியோவை பகிர்ந்து விஜய்யை கண்டபடி பேசினார்.

நீ எந்த தொகுதியில் போட்டி

இதனைடுத்து வேறொரு வீடியோவை பகிர்ந்துள்ளார் ஜூலி. அந்த வீடியோவில், உனது கட்சியில் யாருமே வெற்றி பெற மாட்டார்கள். நீ கூட அந்த நட்சத்திர அந்தஸ்தை வைத்து வென்று விடக் கூடாது அண்ணே.

நீ எந்த தொகுதியில் போட்டி..சீக்கிரம் சொல்லு!! விஜய்யை தாக்கி பேசிய ஜூலி.. | Bigg Boss Fame Julie Slams Thalapathy Vijay

நீ எந்த தொகுதியில் போட்டியிடறனு மட்டும் சொல்லு, நான் அங்க தான் அண்ணா டேரா. நான் இறங்கி நின்னு அந்த தொகுதியில் பிரச்சாரம் செய்வேன் அண்ணா. பெண்களுக்கு எந்த அளவுக்கு உனது கட்சியில் பாதுகாப்பு இருக்கிறது என்பது தொடர்பாக நான் பிரச்சாரம் செய்வேன்.

சீக்கிரம் சீக்கிரம் அறிவியுங்கள் அண்ணா, ஐ எம் வெயிட்டிங், நான் வரேன் அண்ணே என்று பேசியிருக்கிறார். இதற்கு பலரும் ஜூலியை கண்டபடி திட்டியபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.