நிச்சயதார்த்தத்தை முடித்த பிக்பாஸ் ஜூலி!! மாப்பிள்ளை இஸ்லாமியரா?
பிக்பாஸ் ஜூலி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார் ஜூலி. நிகழ்ச்சியில் சில விஷயங்களால் மக்கள் வெறுப்பை சம்பாதித்த ஜூலி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் பல இடங்களில் அவமதிக்கப்பட்டார்.

அதையெல்லாம் கண்டுக்கொள்ளாத ஜூலி, மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நல்ல வரவேற்பை பெற்றார். இதனையடுத்து ஒருசில படங்களிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார் ஜூலி.
தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறி ஒரு போட்டோஷூட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். வருங்கால கணவருடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து பலரது வாழ்த்துக்களையும் பெற்று வருகிறார் ஜூலி.

ஏற்கனவே தான் காதலித்து வந்த மனிஷ் என்பவர் என்னை ஏமாற்றிவிட்டார் என்றும் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் இருசக்கர வாகனம், 2 சவரன் தங்கச்செயின், பிரிட்ஜ் என 2 லட்சம் ரூபாய் வரை செலவு செய்தேன், ஆனால் மனிஷ் மதத்தைக்காட்டி காதலை முறித்துக்கொண்டார் என்று ஜூலி மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதனையடுத்து ஜூலி நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
மாப்பிள்ளை இஸ்லாமியரா
தன்னுடைய வருங்கால கணவரின் முகத்தை காட்டாமல் புகைப்படத்தை பகிர்ந்த ஜூலி, என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் மனிதனை நான் கண்டுபிடித்து விட்டேன். நான் பிரார்த்தித்த அனைத்தும் அவன் தான் என்ற கேப்ஷனையும் போட்டுள்ளார்.
அந்த பதிவில் மெகஹரசைலா என்ற பின்னணி இசையாக வைத்திருப்பதால் ஜூலியின் வருங்கால கணவர் இஸ்லாம் மதமா? என்றும் ஜூலி கிறிஸ்தவ மதத்தில் இருந்து இஸ்லாமுக்கு மாறுவாரா? என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது.