என்னமா இப்படி இறங்கிட்டீங்க..? பிக்பாஸ் ஜூலியின் வீடியோவை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்..

biggboss oviya julie biggbosstamil
By Edward Apr 14, 2021 04:11 AM GMT
Edward

Edward

Report

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருந்து வருகிறார் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது எடுத்த பெயரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கெடுத்து கொண்டார். அவரின் செயலால் மக்கள் அவரை ஏற்க மறுத்து கேலி கிண்டலுக்கு ஆளாகி வருகிறார்.

இதையெல்லாம் கண்டு கொள்ளாத ஜூலி அம்மன் தாயே' உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் பிக்பாஸ் ஜூலி அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் மற்ற பிக்பாஸ் பிரபலங்களை போல் ரசிகர்களால் பேசப்படவில்லை. இந்நிலையில், சேலையில் இடுப்பு தெரிய கவர்ச்சி காட்டி சமீபத்தில் ஒரு போட்டோ ஷூட் நடத்தப்பட்டது.

இது தொடர்பான வீடியோவை ஜூலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் "என்னமா இப்படி இறங்கிட்டீங்க..? - சில்க் ஸ்மிதாவையே ஓரம் கட்டிடுவீங்க போல என்று கலாய்த்தவாறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.