ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட கம்ருதீன், பார்வதி வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
Bigg Boss
Bigg boss 9 tamil
By Kathick
பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு கொடுக்கப்பட்டு கம்ருதீன் மற்றும் பார்வதி ஆகிய இருவரும் வெளியேற்றப்பட்டனர்.

சாண்ட்ராவிடம் இவர்கள் இருவரும் நடந்துகொண்ட தவறான முறை காரணமாக, இவர்களுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய கம்ருதீன் மற்றும் பார்வதி வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் 9ல் விளையாட வந்த கம்ருதீன் ஒரு நாளைக்கு ரூ. 15 முதல் ரூ. 20 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டு வீட்டிற்குள் வந்ததாக கூறப்படுகிறது. அதேபோல், வந்த பார்வதி ஒரு நாளைக்கு ரூ. 20 ஆயிரம் சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது.
ஆனால், ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டதால், இவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது என்றும் சிலர் கூறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.