கமல் நிகழ்ச்சியால் வாழ்க்கையே நாசமாக்கிக்கொண்ட நடிகர்.. கதறி புலம்பும் பிரபலம்.

Kamal Haasan Bigg Boss
By Jai Nov 27, 2022 06:04 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலான ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ்.

கமல் ஹாசன் தொகுத்து வழங்கி ஹிட் கொடுத்து வரும் இந்நிகழ்ச்சி மூலம் பல நல்ல இடத்தில் இருப்பதைவிட ஆளே காணாமல் போனவர்கள் தான் அதிகம். அப்படி டைட்டில் வின் பண்ணவர்களுக்கே சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் சிக்கிசின்னாபின்னமாகி இருக்கிறார்கள்.

அந்தவரிசையில் இருப்பவர் தான் சக்தி. இயக்குனர் வாசுவின் மகனாக சினிமாவில் அறிமுகமாகி சில வாய்ப்பினை சரியாக பயன்படுத்தாமல் இருந்தார். திருமணம் செய்த மனைவியே விவாகரத்து செய்யும் அளவிற்கு சென்றதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சக்தி.

சமீபத்தில் அந்த நிகழ்ச்சியால் என் வாழ்க்கையே நாசமாகிவிட்டது என்று சக்தி பேட்டியில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், பிக்பாஸில் மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர தான் அங்கு சென்றேன்.

ஆனால் அங்கு இருந்தவர்கள் என்னை வேறுவிதமாக திசைத்திருப்பி எனக்கு மன உளைச்சலை கொடுத்தனர். இதனால் என் வாழ்க்கையே நாசமாகிவிட்டது என எமோஷ்னலாக கூறியுள்ளார்.