நான் மக்களை வென்றுவிட்டேன்.. பிக் பாஸுக்கு பின் சௌந்தர்யா வெளியிட்ட பதிவு

Bigg Boss Bigg Boss Tamil 8 Soundariya Nanjundan
By Kathick Jan 22, 2025 03:30 AM GMT
Report

பிக் பாஸ் 8ல் டாப் 2வில் வந்தவர் சௌந்தர்யா. முத்துக்குமரன் டைட்டில் வின்னர் ஆன நிலையில், சௌந்தர்யா தான் உண்மையான வெற்றியாளர் என அவருடைய ரசிகர்கள் கூறி வந்தனர்.

ஆனால், முத்துக்குமரன் தான் இதற்கு தகுதியானவன் என சௌந்தர்யா கூறியிருந்தார். இந்த நிலையில், பிக் பாஸில் இருந்து வெளியே வந்துள்ள சௌந்தர்யா, தனது ரசிகர்களுக்கும், மக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது :

"இந்த வெற்றி, என் முதல் படம் வெளியாகி 106 நாட்கள் வெற்றிகரமாக ஓடியதைப் போல உள்ளது, அதன் வெற்றியைப் போலவே நான் இப்போது இந்த வெற்றியை அனுபவிக்கிறேன்".

"Bigg Boss வீட்டில் இருக்கும்போது, நான் எந்த விளையாட்டையோ, டாஸ்கையோ வெல்ல முடியாமல் போயிடும் என எப்போதும் கவலைப்பட்டேன். ஆனால் இறுதிச்சுற்றிற்கு வந்தபோது, என் மனசு என்னிடம் சொன்னது, ‘நீ ஏற்கனவே மக்களின் மனசை வென்றிருக்கிறாய்,’ அதுதான் எனது உண்மையான வெற்றி. நான் மக்களை வென்றுவிட்டேன்".

"என்னை இயல்பாகவே ஆதரித்து, நேசித்த உங்களைப் பெற்றதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்".

"Bigg Boss என்னிடம், வீட்டை விட்டு வெளியே சென்ற பிறகு என்னை நேசிக்கிறவர்களையா அல்லது என்னை விரும்பாதவர்களையா சந்திக்க போகிறாய் என கேட்டார். அப்போது நான், ‘என்னை நேசிக்கிறவர்களை,’ என்று சொன்னேன். ஆனால் இப்போது, எல்லோரையும் சந்திக்க தயார் — என் மனசை ஒவ்வொருவருக்கும் கொடுக்க".

"நீங்கள் என்னை டிவி மற்றும் போனில் பார்த்து வந்தீர்கள், அடுத்து விரைவில் திரையரங்கில் உங்களை சந்திக்கிறேன்". என பதிவிட்டுள்ளார்.