கிளாஸிக் பாத்ரூம் முதல் சீக்ரெட் ரூம் வரை!! பிக்பாஸ் தமிழ் 10 சீசன் வீட்டின் 'ஹோம் டூர்'..
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 முதல் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக்பாஸ். செப்டம்பர் 6 ஆம் தேதி நடிகர் விஜய் சேதுபதியால் தொடங்கவுள்ளது பிக்பாஸ் தமிழ் சீசன் 10.
தற்போது பிக்பாஸ் சீசன் 10 வீட்டின் பிரமாணமான ஹோம் டூர் விவரங்கள், புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அப்படி வீட்டிற்கு என்ன என்ன விஷயங்கள், எப்படியான தோற்றம் இருக்கிறது என்று பார்ப்போம்..

ஹோம் டூர்
பிக்பாஸ் 10 வீட்டிற்குள் பசுமையான சூழலை உருவாக்க்கும், பச்சை நிற அலங்காரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.
கார்டன் ஏரியா, ஸ்விம்மிங் பூல், டனிங் ஏரியா, டாஸ்க் நடக்கும் இடங்கள் அனைத்தும் கண்ணை பறிக்கும் வண்ணங்களை நேர்த்தியாக வடிவமைத்துள்ளனர்.
கேப்டனுக்கு தனி ராஜபோக அறையும், மெயின் படுக்கையறையில் மொத்தம் 10 மெத்தைகளும் உள்ளன. இதில் 8 மெத்தை இருவர் பகிர்ந்துகொள்ளும் வகையிலும், 2 மெத்தை தனித்தனியாகவும் இருக்கிறது.
பிளாக் அண்ட் வொயிட் டைல்ஸ்கள், விலையுயர்ந்த வேலைப்பாடுகளுடன் கூடிய குளியறை பகுதியும், 3 பாத்ரூம், ஒரு உடை மாற்றும் அறை உள்ளது.
வீட்டிற்குள் ஒரு ரகசிய அறை இருக்கிறது. அது எதற்காக பயன்படப்போகிறது என்று செப்டம்பர் 6 ஆம் தேதி அன்றில் இருந்து நமக்கு தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.




