பிக்பாஸ் சீசன் 9 : பிரஜனை தொடர்ந்து இந்த வார எலிமினேட்டானது இவர் தானா?
Bigg Boss
Bigg boss 9 tamil
Ramya Joo
By Edward
பிக்பாஸ் சீசன் 9
விஜய் டிவியில் நடிகர் விஜய் சேதுபதியால் தொகுத்து வழங்கப்பட்டு வரும் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது 68 நாட்களை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் போட்டியாளர்களுக்கு கோர்ட் டாஸ்க் கொடுக்கப்பட்டு காரசாரமான வாக்குவாதம் நடந்தது.

கடந்த வாரம் பிரஜன் பிக்பாஸ் சீசன் 9 வீட்டைவிட்டு எலிமினேட்டாகி வெளியேறிய நிலையில், இந்த வாரம் யார் வீட்டைவிட்டு வெளியேறுவார் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.
எலிமினேட்
68வது நாள் முடிவில் இன்று சனிக்கிழமை எபிசோட்டின் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ளது. அந்தவகையில் குறைவான வாக்குகள் பெற்று ரம்யா ஜோ தான் எலிமினேட் ஆகியுள்ளதாக தகவல் வெளியிருக்கிறது.
ஆனால் உண்மையில் யார் வெளியேறினார் என்ற தகவல் நாளை விஜய் சேதுபதி எபிசோட் ஒளிப்பரப்புக்கு பின் தான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.