பிக்பாஸ் வீட்டைவிட்டு வாங்கன்னு கூப்பிட்ட விஜய் சேதுபதி!! பெட்டியை கட்டிய போட்டியாளர்..
பிக்பாஸ் சீசன் 9
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். 62 நாட்களை கடந்த நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்களின் செயல் பலருக்கும் அதிருப்தியை கொடுத்து வருகிறது.
படுமோசமாக நடந்து கொண்டு வரும் போட்டியாளர்களால் பிக்பாஸே கடும் கோபத்தில் பிக்பாஸ் வீட்டினை கண்டித்தார்.

எவிக்ஷன்
இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்று கூறப்பட்டு வந்து நிலையில், முதலில் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் போட்டியாளர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதில் அமித் மற்றும் சுபிக்ஷா எவிக்ட்டாகியுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியான நிலையில், இன்று யாரும் எலிமினேட் செய்யப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த வார பிரமோ வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த வீட்டில் இருக்க மாட்டேன் நான் வெளியே போகிறேன் என்று ரம்யா, விஜய் சேதுபதியிடம் சொல்ல, ப்ளீஸ் கம் அவுட் என்று வெளியேற வரச்சொல்ல, பிக்பாஸ் 9 வீட்டின் கதவு திறந்தது. உடனே ரம்யா கிளம்புவது போல் பிரமோ வீடியோ அமைந்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் ரம்யா போவாரா? இல்லையா? என்ற கருத்துக்களை கூறி வருகிறார்கள்.