பிக்பாஸ் சீசன் 9ல் பலூன் அக்காவா!! அதுவும் இந்த கிளாமர் சீரியல் நடிகையுடமா?
பிக்பாஸ் சீசன் 9
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சி. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ள பிக்பாஸ் சீசன் 9 வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
நிகழ்ச்சியில் யார் யார் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள் என்ற தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 9ல் யார் யார் போட்டியாளர்களாக கலந்து கொள்ளப்போகிறார்கள் என்ற தகவல் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
ஏற்கனவே குறிப்பிட்ட போட்டியாளர்களை தாண்டி தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்த நடிகை ஜனனி அசோக் குமார், பலூன் அக்கா என்று சோசியல் மீடியாவில் பிரபலமான மாடல் மற்றும் நடிகையான அரோரா சின்க்ளேர், யூடியூப் பிரபலம் மற்றும் டிஜிட்டல் கிரியேட்டரான அகமது மீரான் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும், சீரியல் நடிகை ஃபரினா அசாத், குக் வித் கோமாளி சீசன் 2வில் கலந்து கொண்டு பிரபலமான நடிகர் அஷ்வின் குமார், தொகுப்பாளினி விஜே பார்வதி, நடன இயக்குஅர் சாண்டி மாஸ்டரின் மனைவியின் தங்கை சிந்தியா வினோலின், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்கும் டாலி, பாக்கியலட்சுமி சீரியல் நேஹா, சீரியல் நடிகர் புவி அரசு, நடிகர் சித்தார்த் குமரன், KPY சாம்பியன்ஸ் சீச்ன் 3 டைட்டில் வின்னர் ராஜவேலு, சீரியல் நடிகர் சித்து, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டவர்கள் போட்டியாளர்களாக பங்கேற்கவுள்ளார்களாம்.



