பானி பூரி என்றால் உயிர்.. சாலையோர உணவை விரும்பும் அந்த டாப் நடிகை.. அட அடி தூள்!
பொதுவாக நடிகைகள் ஆடம்பர வாழ்க்கையை தேர்வு செய்து வாழ்கின்றனர். ஆனால், மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் நடிகை ஒருவர் சாலையோர பானி பூரி சாப்பிடுவது மிகவும் பிடிக்கும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?
டாப் நடிகை?
ஆம், அவர் வேறு யாருமில்லை ஸ்ரீநிதி ஷெட்டி தான். 2018ல் வெளியான 'கேஜிஎஃப்: சாப்டர் 1' படத்தின் மூலம் அறிமுகமான இவர் இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.
இவர் பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " சிறுவயதிலிருந்தே சினிமா மீது எனக்கு ஆர்வம் அதிகம். என் அம்மா இறந்த பின் அப்பா தான் எங்களை வளர்த்தார். எவ்வளவு புகழ் வந்தாலும் எளிமையாக இருப்பதே பிடிக்கும்.
சாலையோர பானி பூரி சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். மக்கள் என்னை அடையாளம் காணும் முன் அங்கிருந்து சென்றுவிடுவேன்" என்று தெரிவித்துள்ளார்.